காரைநகர் – மானிப்பாய்
காரைநகர், புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கோலாலம்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் தற்போது மூத்ததம்பி ஒழுங்கை மானிப்பாயில் வசித்து வந்தவருமான திருமதி நடனராணி சிவநாயகம் கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சிவநாயகம் – சிவசம்பு அவர்களின் (இறப்பர் ஆராய்ச்சி நிலையம் – மலேசியா, காரைநகர் சந்தம்புளியடி) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குணநாயகம் – முத்தாபரணம் தம்பதியரின் (காரைநகர், புதுறோட்) மூத்தமகளும்
குணநாயகம் இராசநாயகம் (முன்னாள் அதிபர் – யாழ்ப்பாணக் கல்லூரி), இந்திராணி ஜெயக்குமாரன் (முன்னாள் உப அதிபர் – யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்வரி ராசநாயகம்,வண.பிதா ஜெயக்குமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டாக்டர் டிலானி ஜெயக்குமாரன், டாக்டர் டினேஸ் ஜெயக்குமாரன், டிலக்சன் ஜெயக்குமாரன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ராஜினி வைமன், ரிறோன் வைமன், ராஜ்மோகன் ராசநாயகம், டாக்டர் றோசினி ராஜ்மோகன், ராஜ்குமார் ராசநாயகம், டாக்டர் சரோன் ராஜ்குமார், வைதேகி டினேஷ், பிரியாந்தி டிலக்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஸ்மிதா வைமன், திமொத்தி வைமன், ரித்திக்கா ராஜ்மோகன், ரச்சித்தா ராஜ்மோகன், ரிசான் ராஜ்குமார், ரமித்தா ராஜ்குமார், கேசியா டினேஷ், கிறேசியா டினேஸ், நிதன் டிலக்சன், நிலானி டிலக்சன் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல.12, மூத்ததம்பி ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு நல்லடக்க ஆராதனை நடைபெற்று மானிப்பாய் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:- தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அஞ்சலி செலுத்த வருவோர் பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இல.12, மூத்தத்தம்பி ஒழுங்கை,
மானிப்பாய்.
தகவல்: இந்திராணி ஜெயக்குமார். (சகோதரி)
077 754 3368