இரண்டாம் ஆண்டு நினைவு
அப்பா
ஆண்டுகள் இரண்டு ஆனது
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நமக்கு ஆறுதல் சொல்லவருவது
கண்ணீர் மட்டும் தான்!
அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம்
என இவை அனைத்தையும் தந்த
அப்பாவின் வெற்றிடத்தை நிரப்ப
யாரும் இல்லை இவ்வுலகில்…
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இறைவனடி சேர்ந்த எமது அப்பாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்10-01-2021 ஞாயிற்றுக்கிழமை எமது இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
நினைவு தின நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்களை கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பெற இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்,
இடைக்குறிச்சி வரணி.