அமரர் தங்கராஜா சுபாஜினி

மலர்வு

18.07.1973

உதிர்வு

26.12.2019

பலாலி – அச்சுவேலி

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்றும் – நெஞ்சில்
நீறாக நின்றெரியுதம்மா!

அன்பின் உறைவிடமாய்
இல்லத்தில் உயர்ந்து நின்றாய்
பெண் இனத்தின் பெருந்தகையாய்
நல்லறமாய் வாழ்ந்து நின்றாய்!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

சிரித்த முகம் மாறாத
சிறு பிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை – வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்.
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம் அன்பின் ஈரம் காய்வதற்கு – என்றும்
எம் அருகில் இருக்கிறாய் – அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா என்று.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் நினைவஞ்சலியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

பலாலி கிழக்கு,
பலாலி.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவன் தங்கராசா, மகன் பபீந்திரன் (லண்டன்)
மகன்மார் கீர்த்தனா, சுவன்ஜா (குடும்பத்தினர்)
077 102 4945

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro