திரு.சின்னத்துரை குமாரவேல்

மலர்வு

01.12.1945

உதிர்வு

13.01.2021

சுன்னாகம்


சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும் கொண்டசின்னத்துரை குமாரவேல் அவர்கள்(விவாகப் பதிவாளர், சுன்னாகம் ஐயனார் தேவஸ்த்தான நிர்வாக சபையின் முன்னாள் தலைவர், சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர்) 13.01.2021 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் அமரர் திலகவதி(முன்னாள் பொது முகாமையாளர், சுன்னாகம் ப.நோ.கூ.ச)அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஷனி(மருத்துவ ஆய்வுகூட தொழில் நுட்ப உத்தியோகத்தர், மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்) ஜெயப்பிரணவன்(கனடா) ஆகியோரின் பாசத்துக்குரிய தந்தையாரும்,

சுரேஷ்குமார்(பிரதம பொறியியலாளர்,யாழ்ப்பாணம் மா நகரசபை) , பானுஷா ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,

கேதுஷாஇகேனிஷா(உடுவில் மகளிர் கல்லூரி தரம் 5 மாணவிகள்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அமரர் வெற்றிவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திலகரத்தினம்(கனடா), இலங்கை நாயகம் என்று அழைக்கப்பட்ட அமரர் கிருஷ்ணானந்தன்(ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர், இலங்கைப் பாராளுமன்றம்), அமரர் தர்மாவதி ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 13.01.2021 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு காங்கேசன்துறை வீதி சுன்னாகம் இலங்கை வங்கி அருகிலுள்ள முத்துக்கிருஸ்ணர் ஒழுங்கையில் அமைந்திருக்கும் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக பூதவுடல் சுன்னாகம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்

தொடர்புகளுக்கு,
விது(மகள்)-0773180319
சுரேஷ்(மருமகன்)-0774136193

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro