அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

மலர்வு

03/04/1938

உதிர்வு

01/01/2021

யாழ் – பருத்தித்துறை

கட்டுப்படுத்தியது உன் அன்பு.

வெளிப்படையாக நீ காட்டியதில்லை,
உம் பாசத்தை.
இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்
நாம் பெறவே நீ உழைத்தாய்.

நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.
ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.
விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.
இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது
நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.
அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|
என்று பைபிள் வரிகளை எமக்குரைத்து
நீ இறைவனிடம் சென்றுவிட்டாய்.
கொடுத்து வைத்தவன் நீ அப்பா.
இறைவனோடு நீ என்றும் வாழ்வாய்.

வானக தேவனிடம் உன்னை வழியனுப்ப வந்தவர்களின்
வாழ்த்தொலிகளை கேட்டபோதுதான் எமக்கு தெரிந்தது
வாழ்வென்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று.

நாம் இன்னும் மறக்கவில்லை
நாம் சிரிக்கும்போது நீ புன்னகையானதை
நாம் அழும்போது நீ கண்ணீரானதை தொட்டிலில் தூங்கினால்
நாம் விழுந்து விடுவோமோ என்பதால்
உன் தோள் மீது உறங்க வைத்ததை.
அகிலமே கூடி எதிர்த்தாலும்
எம்முடன் வரும் ஒருவனும் நீதான்.
தனிமையில் நாம் தவிக்கும் பொழுது
துணையாய் வரும் ஒருவனும் நீதான்
தோல்வியில் சுருளும் பொழுது
தூணாய் வருபவனும் நீதான்
நீ இறைவனின் சந்நிதானத்தில் இன்பமாக வாழ
நாம் தினம் இறைவனிடம் வேண்டிடுவோம் அப்பா.

குடும்பத்தினர்,
றோஸ் கொட்,
கடற்கரைவீதி,
பருத்தித்துறை

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro