யாழ் – உரும்பிராய்
யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 12.02.2021 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வியும் அமரர் நாகலிங்கம் BOC, மற்றும் திருமதிஈஸ்வரி, அமரர் சற்குனேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம் T.K.(MD) அவர்களின் அன்புச் சகோதரியும், சாவித்திரி அமரர் கணேசமூர்த்தி, திருச்செல்வம் (ஆசிரியர்), புஸ்பவதி ஆகியோரின் மைத்துனியும், வரதனின் மாமியும், ஸ்ரீ விக்னேஸ்வரன், திருமகள், கலைமகள், சிவகாமி, ரேவதி ஆகியோரின் அன்பு சிறிய தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.02.2021 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இளங்காடு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: பஞ்சலிங்கம்
0212232010
அரசவீதி,
உரும்பிராய் கிழக்கு.