காரைநகர் – தலங்காவல்
தன்னை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் இல.89, அம்மன் வீதி, தலங்காவற் பிள்ளையார் கோவிலடி, நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சபாரத்தினம் அவர்கள் 15.02.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் இஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவநாயகியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் மற்றும் சிவலிங்கம், மதனசுந்தரம், காலஞ்சென்ற உமாதேவி, அமராவதி, நவரத்தினம் மற்றும் காலஞ்சென்ற புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் கஜேந்திரன் (சபாரேடர்ஸ் யாழ்ப்பாணம்), கஜேந்தினி, தியாகேந்திரன் (சிவரூபினி மோட்டர்ஸ் யாழ்ப்பாணம்), பாலேஸ்வரி மற்றும் நிஷாந்தன் (சபாரேடர்ஸ் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகேஸ்வரன் (பிள்ளையார் ஸ்ரோர்ஸ் கல்கமுவ), சகாதேவன் (பிரதம பொறியிலாளர், நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை, கொழும்பு) மற்றும் ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும் டிவாகர், சிவானி, கிருத்திகா, அஸ்வின், கிரணீஷா மற்றும் சரண் ஆகியோரின் அன்பு பேரனும், காலஞ்சென்ற பார்வதி, பாக்கியம், காலஞ்சென்றவர்களான நவரத்தினம், வேலாயுதம் மற்றும் சிவராசா, ராசலக்ஷிமி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.02.2021 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி. பிள்ளைகள்.