திரு. சிவராசா திலீபன்

மலர்வு

29.07.1982

உதிர்வு

22.02.2021

யாழ் – நல்லூர்

முருகேசர் வீதி, நல்லூரைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவராசா திலீபன் 22.02.2021 அன்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவராசாதேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜேந்திரம் (ஆனந்தம்) மற்றும் இராஜகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்

சுபாசினியின் அன்புக் கணவரும்

தனுசன், தீபிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

காலஞ்சென்ற சிவதேவதாசன், மற்றும் கிரிதாஸ் (பிரஹா ஜெட் லைன் உரிமையாளர் ) சதீஸ் (மதி கலர்ஸ் பிறிண்டர்ஸ் உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

வினோதினி, ஜெனார்த்தனி, ரஜனி, ரஜிதா, சகிலா, சுஜாதா, மேனுகா, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு மைத்துணரும்

செல்வராஜா, தியாகரட்ணம், திவாகரன், கவிராஜ், திலீபன் ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.02.2021 (புதன்கிழமை) முருகேசர் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 09.00 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


இல 15/2 முருகேசர் லேன், நல்லூர்.
தொ.இல : 0777222524
தகவல் : குடும்பத்தினர்

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro