ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம்
நிழல் போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்…!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்…!
இதயங்கள் எல்லாம் நொருங்க
இமைகள் எல்லாம் நனைய…!
எங்களை தவிக்க விட்டு
எங்கோ நீ போகிறாய்…!
பல வருடம் நம் உறவுகள்
ஏழு ஜென்மம் பந்தம்…!
உறவென்ற ஒன்றுக்குள்
நாம் சேர்ந்து நின்றோம்…!
நீ எங்களை விட்டு தூரத்தில் இல்லை
நினைவுகளில் இருக்கிறாய்…!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய்..!
என்றும் உன் நீங்கா நினைவுகளுடன் நாம்…!
அன்புடையீர்,
கடந்த 17.03.2020 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்த எமது குடும்பத்தின் குலவிளக்கு
அமரர் சிறிசிவகுமார் சிபிதரன்
அவர்களின் முதலாம் ஆண்டு திவசம் எதிர்வரும் 17.03.2021 புதன்கிழமை மதியம் 11.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
அத் தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
3ம் கட்டை, ஆனைக்கோட்டை,
குருசுமதவடி, 1ம் குறுக்கு ஒழுங்கை.
இங்ஙனம்: குடும்பத்தினர்.