உயர்திரு. முருகேசு சண்முகராசா

மலர்வு

19.01.1933

உதிர்வு

18.03.2021

நயினாதீவு – யாழ்ப்பாணம்

நயினாதீவு அமுத சுரபி அன்னதான சபையின் ஆரம்ப கர்த்தாவில் ஒருவரும், பகவான் ஸ்ரீ சத்தியசாயிபாபா நிலையம் (சாயி நயனம்) நயினாதீவின் ஆரம்ப கர்த்தாவும், சமய, சமூகத் தொண்டருமான உயர்திரு. முருகேசு சண்முகராசா

யாழ்ப்பாணம், நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகராசா அவர்கள் நேற்று (18.03.2021) வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

வரலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைவாணி, சந்திரவதனி, தர்மகுலராசா, சத்தியவாணி, சுமந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகீரதன், முருகபத்மராஜா, செல்வகுமாரி, மனோகரன், நிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, சிவக்கொழுந்து, நாகரெத்தினம், கோபாலபிள்ளை, இராசமணி, சின்னராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் மற்றும் நாகலெட்சுமி, குணலெட்சுமி ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயிரதன், ஜெனட் சாய்ரஜா, சுபேஜன், கனகரதன், ஷிவாந்தி, ஸ்ரீஹரி, ஸ்ரீதாஸ், சகானா, ஸ்ரீராகவி, யுகேந்திரன், சயந்தினி, அபிநாஷ், ரிஷாந், வியுஷாந், வர்ஷிகன், அபிராம், அபிசாயிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சாய்லேஸ், சுயேஸ், வைஷ்ரா, அமரா (ஸ்ரீதேவி) சுகனா, சகாதேவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.03.2021) வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,

பூதவுடல் தகனக்கிரியைக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

தொலைபேசி இலக்கம்: 077 086 7269

இல. 7ஆம் வட்டாரம்,
நயினாதீவு, யாழ்ப்பாணம்.

https://vimeo.com/525987527

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro