திருமதி. திலகவதி அருட்பிரகாசம்

மலர்வு

08.09.1946

உதிர்வு

23.03.2021

காரைநகர் – கந்தர்மடம்

இலந்தைச்சாலை, காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 02, திருவள்ளுவர் ஒழுங்கை, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திலகவதி அருட்பிரகாசம் 23.03.2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் வேலுப்பிள்ளை (ஐயம்பிள்ளை மாஸ்ரர்) – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

அரசடிக் காட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அருட்பிரகாசத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தருமலிங்கம், பார்வதி, சொக்கலிங்கம் மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தேவமங்கை மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்ற கருணைலிங்கம் மற்றும் சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி வைகுந்தவாசன் மற்றும் சரஸ்வதி, பாலசிங்கம், காலஞ்சென்ற இராமச்சந்திரன், செல்வநாயகம், விசுவலிங்கம், நடராஜா, தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 24.03.2021 நடைபெற்று தகனக்கிரியை காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் நடைபெற்றது என்பதை அறியத்தருகின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: திரு.சு.அருட்பிரகாசம் (கணவர்)
மற்றும் குடும்பத்தினர்.

தொடர்புக்கு: 077 617 6895

இல.02,
திருவள்ளுவர் ஒழுங்கை,
அரசடி வீதி, கந்தர்மடம்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro