அமரர் அரியரத்தினம் கந்தசாமி

மலர்வு

09.08.1946

உதிர்வு

02.03.2021

சங்கானை – யாழ்ப்பாணம்

கடந்த 02.03.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர்

அமரர் அரியரத்தினம் கந்தசாமி

(கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்)

கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்
கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்
எங்கள் மனதை விட்டு நீங்காது.

வீட்டுக்கிருத்திய கிரியைகள் இன்று (01.04.2021) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் நிலையில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி, கண்ணீர் அஞ்சலி, மலர் வளையம், பதாதைகள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் சிற்றுண்டிகள் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாளியாவத்தை,
சங்கானை.

தகவல்:
கந்தசாமி அன் சன்ஸ் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: 077 339 3372

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email