திரு.வேலாயுதன் சிவஞானசோதி

மலர்வு

21.12.1959

உதிர்வு

05.04.23021

கொழும்பு – கொழும்பு

B.A(Econ) Hons, MSc(Bradford), U.K FCMA (London), FCA (Sri Lanka) , Chartered Accountant

முன்னாள் செயலாளர் தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தற்போதைய செயலாளர், மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பொதுசேவை ஆணைக்குழு அங்கத்தவர்

திரு.வேலாயுதன் சிவஞானசோதி அவர்கள் 05.04.2021 அன்று மாலை சிவபதம் எய்தினார்.

இவர் காலம் சென்ற பிரபல சட்டதரணி திரு.வேலாயுதன் மற்றும் திருமதி.பொன்னம்மா அவர்களின் கனிஷ்ட புத்திரனும்,

காலம் சென்ற திரு.சிவசுப்பிரமணியம் மற்றும் திருமதி.குமுதினி அவர்களின் அன்பு மருமகனும்,

குறமகளின் அன்புக் கணவரும்,

பிரபல சட்டதரணி திரு.தேவசேனாதிபதி மற்றும் தேசிய லொத்தர் சபையின் ஓய்வுபெற்ற பிரதி பொது முகாமையாளர்
திரு.சுந்தரேஸ்வரன் அவர்களின் அன்பு சகோதரனும்,


கௌரி, சுமதி அவர்களின் மைத்துனரும்,


மயுரதன்-சிங்கப்பூர், சிவசங்கரன்-கனடா, .சிவகாந்தன் ,

வேல்விழி கனடா அவர்களின் மைத்துனரும் ,

பிரதாப், துஷ்யந்தன், அவர்களின் சித்தப்பாவும் ,

கோகுல், சுபஹரி, சிவராம், அருண்சிவா, அவர்களின் மாமாவும்

பிரணவன், பைரவி அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் புதன்கிழமை 9.00-6.00 மணிவரையும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு வியாழக்கிழமை (Jayaratna VIP Palour வைக்கப்பட்டு) பிற்பகல் 1.00 மணியளவில் கிரிகைகள் ஆரம்பமாகி 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

திரு.வேலாயுதன் சிவஞானசோதி அவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சுக்களில் – தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, சுற்றுலாதுறை அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் செயலாளராகவும் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தற்போது மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராகவும் பொதுச்சேவை ஆணைக்குழவின் அங்கத்தவராகவும் கடமையாற்றினார்.

தகவல் :
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
குறமகள் (மனைவி) – 0779007623
தேவசேனாதிபதி (சகோதரன்) – 0771133400
சுந்தரேஸ்வரன் (சகோதரன்) – 0773850841

https://vimeo.com/533462440

Share This Post

Select your currency
EUR Euro