அமரர் சண்முகம் பரமேஸ்வரி

மலர்வு

24.08.1960

உதிர்வு

22.03.2020

ஏறாவூர் – மட்டக்களப்பு

திதி: 09.04.2021

பூத்துக்குழுங்கிய புன்னகை முகத்துடன்
எம்மை எல்லாம் அரவணைத்துக்காத்த
எமது குடும்ப குத்துவிளக்கே நீ எங்கே சென்றாய்…
எம்மை எல்லாம் ஆறாத்துயரில் ஆற்றி விட்டு
நீ மீளாய்த் துயர் கொண்டதன் மாயமென்ன
கொடிய நோய் வந்து உன்னை காவுகொண்டதோ!
கோபம் என்பதே இல்லா உன் புன்னகை முகத்தை
இனி நாம் எப்போது காண்போம் அம்மா…
எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டொன்று ஆனாலும்
எம் விழிகள் என்றும் கண்ணீராய் நிறைகிறதே!
மனங்களில் உன் மதி முகம் மறையாது தோன்றுதம்மா…
தேசமெங்கும் தேடுகின்றோம் எங்கள் திரவியத்தை
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
ஏற்றிய தீபமாய் எம் நெஞ்சங்களில் வீற்றிருப்பாய்
ஆறாதம்மா எம் துயர் – அழியாதம்மா உன் நினைவுகள்
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
நித்தம் உன் நினைவோடு வாழ்ந்திடும் குடும்பத்தினர்.

முகவரி:
செல்வி தியேட்டர் வீதி,
எல்லைநகர்,
ஏறாவூர் – 04.


தொடர்புகளுக்கு: 074 115 9589

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email