திருமதி பிரியதர்சினி ஈஸ்வரானந்தன்

மலர்வு

13.06.1942

உதிர்வு

10.04.2021

மன்னார் – நல்லூர்

மன்னாரைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரியதர்சினி ஈஸ்வரானந்தன் நேற்று 10.04.2021 சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் டெய்சி தம்பதியரின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சம்பந்தர், பாக்கியம் தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற ஈஸ்வரானந்தனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன் மற்றும் நகுலேஸ்வரியின் மைத்துனியும்,

காலஞ்சென்ற விக்கினராஜா (விக்கி) மற்றும் தயாளினி (தயா-ருளுயு), மகிந்தன் (பனை அபிவிருத்திச் சபை,யாழ்ப்பாணம்), மகேந்திரன் (கண்ணா- கொமேர்ஷல் வங்கி,யாழ்ப்பாணம்), ஜனகன் (ஜனா- பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயதாஸ் (ருளுயு), ஹம்சா (நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியை), ஜமுனா (ஆசிரியை- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்சிகா, கம்சிகா, கஜானி, அபிநயா, கேசரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 11.04.2021 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:00 மணியளவில் அன்னாரின் நாவலர் வீதி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:-
528, நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
077 501 8189
077 390 5115
077 630 4334

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email