அனலைதீவு – கனடா
யாழ். அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் கணேசன் கடந்த (13.05.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
லோகராணியின் அன்பு கணவரும்,
ஜோதிகா, பிரணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வானைப்பிள்ளை (தேவி), நிரஞ்சனாதேவி(கௌரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், பவானந்தன், கனகாம்பிகை- கணேசன், குகதாசன் – சந்திரகலா, மகேதிரதாசன் – பத்மா, உருத்திரதர்சன் – றாகினி, சண்முகதாசன் – வாணிசிறி, காலஞ்சென்ற தனலெட்சுமி – மகேசன், கண்ணதாசன், செல்வராணி – தெய்வீகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுசன், அனுசா, தனுஜா, ஜிவி, சூரியா, சபரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (17.05.2021) திங்கட்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் 10.30 வரை Brampton Crematorium & Visitation Center, 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada வில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் அன்று காலை 10.30 மணியளவில் அதே இடத்திலேயே இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஆனந்தன் 0016473888773