யாழ்-சுண்ணாகம்
சுண்ணாகம் டாக்டர் சுப்பிரமணியம் வீதியில் உள்ள டாக்டர் ஆ.நடராசா சுதேச வைத்தியசாலையின் சுதேச வைத்தியரும் சமாதான நீதவானும் ஆன நடராசா கிருஷ்ணராசா அவர்கள் 27.05.2021 ம் திகதி வியாழக்கிழமை அமரத்துவம் அடைந்துவிட்டார். அன்னார் சுண்ணாகம் காலம் சென்ற நடராசா நாகரத்தினம் தம்பதியரின் சிரேஸ்ட புதல்வனும் அளவெட்டி காலம் சென்ற ஆசிரியர் வாதவூரார் மற்றும் நவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அருமை மருமகனும், வைத்தியர் சம்பூரணராணி(பாப்பாக்கா) அவர்களின் பாசமிகு கணவரும் மஹிந்தன் (வடமாகாண கல்வி அமைச்சு) கஜந்தன் (கனடா) அமுதா ஆகியோரின் அருமைத்தகப்பனாரும் ஆவார். தாரணி, சுதர்சினி (கனடா) சாந்தன் (MTஸ் நகையகம் சுண்ணாகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சந்திரராசா(கனடா), மோகனராசா (பல்வைத்தியர், கொழும்பு) காலஞ்சென்ற பவானி ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்ற விமலாதேவி (கனடா), குகநேஸ்வரி (பல்வைத்தியர், கொழும்பு) கருணாகரன், கலாதரன், லோகதரன், காலஞ்சென்ற திவாகரன் மற்றும் தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாருன்யா, சிவலக்சன் (லங்கா சித்தவைத்தியக்கல்லூரி) அருண்யா( வருமானப்பரிசோதகர் – வலி தெற்கு பிரதேச சபை, காருண்யா, வருண்யா(யாழ்.சுண்ணாகம் ஸ்கந்தவரோயாக்கல்லூரி) யதுசாந்தன், டினோஜன் (கனடா) டினுசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுண்ணாகம் சுப்பிரமணிய வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் நான்கு மணியளவில் தகனக்கிரிகைகளுக்காக சுண்ணாகம் கொத்தியாலடி இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : சாந்தன் – 077 96 71 330
கலாதரன் – 071 8561 625
தயாபரன் – 077 69 15 296