யாழ்ப்பாணம் – வசாவிளான்
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை பிறப்பிடமாகவும் சென்.ஜேம்ஸ் வீதி, வசாவிளானை வதிப்பிடமாகவும் கொண்ட திரு.மோசஸ் பொன்ராசா அவர்கள் 28.05.2021 வெள்ளியன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மோசஸ் – ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆபிரகாம் – நட்சத்திரம் தம்பதிகளின்; அன்பு மருமகனும்,
அன்னமணியின் அன்புக்கணவரும்
புனித சகாயராணி, புனித அமலராணி, அன்ரன் அலெக்ஸான்டர் (ராஜன்) அல்பேட் ஆனந்தராஜ், புனித அற்புதராணி (தாதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராசா, லெற்றிசியா தயாழினி, சாந்தராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்
கரன்ஸ்ரன் (Sri Lanka Chamber of Pharmaceuticals) க்ரோலினா, ஜன்ஸ்ரன் (ஜெனி), ஜனுசியா, லான்சியா, மதுசியா, டெனோசன், கர்மிகா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலித் திருப்பலி 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு வசாவிளான் புனித யாகப்பர் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து பூதவுடல் வசாவிளான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.