ஊர்காவற்துறை – புளியங்கூடல்
யாழ்.புளியங்கூடல் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா, புளியங்கூடல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு துரையப்பா 04.06.2021 வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான குகனேஸ்வரி, உதயேஸ்வரி மற்றும் குகபாலசுந்தரி, இராசகுலநாயகம், கேதாரலிங்கம், தேவராசா, அகிலேஸ்வரி, செல்வநாயகம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் கேதாரநாதன், விஜயலட்சுமி, கற்பகவதி, விஜயசிறி, காலஞ்சென்ற ஆனந்தராசா மற்றும் கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுந்தரி, சபாரத்தினம், முருகேசு, தம்பு, லெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பரமேஸ்வரி, நடராஜா, சண்முகலிங்கம் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவகுமார், சிவகுமார், றோகினி, நந்தகுமார், தினேஸ் குமார், நிமலன், நிசாந்தினி, நிறஞ்சன், நிர்சா, உசாந்தினி, சுஜீவன், சஞ்சீவன், பவீனா, பவுஜா, நிதிலன், துஷ்யந்தன், துஷிவன், தனுஜா, பிரகலாதன், பலராமன் ஆகியோரின் ஆசைப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05.06.2021 சனிக்கிழமை நண்பகல் 12:00
மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சுருவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
தேவராசா (மகன்) – 0033610168446


