அமரர் ஆரோக்கியநாதர் அருமை

மலர்வு

18.04.1941

உதிர்வு

22.05.2021

வவுனியா – கொழும்பு

எழில் பொங்கும் நாவாந்துறை என்னும் பூர்வீக கிராமத்தில் அமரர்கள் சந்தியோ அந்தோனிப்பிள்ளைக்கு நான்கு பிள்ளைகளில் மூத்த தலைமகனாக 1941.04.18ம் திகதி ஆரோக்கியநாதர் அருமை இம் மண்ணில் உதித்தார்.

1948 வது வருடம் தனது கல்வியை புனித சூசையப்பர் பாடசாலை கொழும்புத் துறையில் கற்று தச்சுத்தொழிலை ஒரு பாடமாக முறைப்படி கற்றார்.

பாடசாலை காலங்களில் ஒரு சிறந்த ஓவியனாகவும் திகழ்ந்தார்.

வடமோடி நாட்டுக்கூத்திலும் ஆர்வம் கொண்டவராக இம்மானுவேல் என்ற நாட்டுக்கூத்தில் அவரது 18ம் வயதில் 1959இல் மடுத்தீஸ் ராசாவாக வேடம் புகுந்து நடித்து பாராட்டைப் பெற்றார்.

அமரர் அவர்கள் தனது நேர்மையினாலும் சமூகப்பொறுப்பினாலும் அருட்தந்தை Pm அடிகளாரின் காலத்தில் 1985இல் புனிதமரியாள் ஆலய பங்குச் சபையில் பொருளாளராகவும் மற்றும் புனித மரியாள் நலன்புரிச்சங்க பொருளாளராகவும் மற்றும் நீண்டகால புனித மரியாள் சனசமூக நிலைய உறுப்பினராகவும் இருந்து பல நலன்களை புரிந்தார்.

அமரர் ஆரோக்கியநாதன் அருமை அவர்கள் 1964 ஆவணி 22ம் திகதி நாவாந்துறை புனித மரியாள் ஆலய கட்டுமான பணியின் பொறுப்பாளரும் ஊரின் ஆறு முதலாளிகளின் ஒருவருமான அமரர் அந்தோனிமுத்து பத்தினாதர் உத்தரியம் அவர்களின் நான்காவது மகள் மொனிக்கம்மா தங்கவறணத்தை நாவாயூர் மக்கள் புடைசூழ புனித பரலோக அன்னை தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பலனாக முற்கனிகளை பெற்றெடுத்தார்.

அதில் முதற்கனியாகிய அருட்சகோதரி ராஜேஸ்வரி (மேகலா) துறவறவாழ்விற்கு அருட்கொடையாக கொடுத்தார்.

தமது தந்தையின் செபத்தினாலும் நேர்மையான வழிகாட்டலினாலும் அருட்சகோதரி தமது சபையில் உயர்ப்பதவிகளை வகுத்து குறிப்பாக சபையின் பொருளாளராகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அமரரின் மற்றைய இரண்டு பிள்ளைகளாகிய மேரி செலஸ்ரீன சசிகலா, யோண்மேரி ராஜசேகரன் திருமணவாழ்வில் இணைந்து பேரப்பிள்ளைகளுடன் இறை ஆசிருடன் சிறப்பாக புலன் பெயர் நாடுகளில் வாழ்கின்றார்கள்.

அமரர் அவர்களின் கடின உழைப்பினால் உயர்ந்து பல துறைகளில் குறிப்பாக கினியாவிலிருந்து வள்ளம் இறக்குமதி, கடல் அட்டை வியாபாரம், ராஜன் வெதுப்பக உரிமையாளர், தச்சு தொழிற்சாலை உரிமையாளராகவும் இருந்தது மட்டுமன்றி 1965இல் மேகலா இல்லத்தை கட்டி, யோசுவா இல்லம் நாவாந்துறை, மாபோலை, புத்தளம் என்னும் கிராமங்களில் இடம்பெயர்ந்து இல்லங்களை அமைத்து சிறுவயதிலேயே சாதனை படைத்தார்.

இறுதிவரை மன உறுதியுடனும் நேர்மையாகவும் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிரமாணிக்கமாகவும் வாழ்ந்ததோடு மட்டுமன்றி அவரது இரக்க குணங்களால் பல ஏழைக் குடும்பங்கள் வாழ்வதற்கும் வழிகாட்டினார்.

https://vimeo.com/565934280

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro