ஈச்சமோட்டை – திருகோணமலை
யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட கனகசூரியர் நாகேஸ்வரி கடந்த 21.06.2021 திங்கட்கிழமை திருகோணமலையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருணாச்சலம் – யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசூரியரின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன் (பிரான்ஸ்) ரஞ்சினி, ராகினி, குலேந்திரன் (ஜேர்மன்) புவீந்திரன் (ஜேர்மன்) ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலசிங்கம், புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலேந்திரன், மகேஸ்வரி (மஞ்சு), சண்முகலிங்கம், பிரேமகாந்தி, நந்தினி, மோகனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம்சென்ற திருநாவுக்கரசு, அன்னபூரணம், தவராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
வேலாயுதம் பாலசிங்கம்
(சகோதரன்)
இல.42, ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.