Rev. திருமதி பத்மா சிவானந்தன்

மலர்வு

11.07.1944

உதிர்வு

24.06.2021

சிங்கப்பூர் – கனடா

(Chartered Accountant, Bachelor of Religious Education)

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, கனடா Toronto, Ontario மற்றும் Victoria, British Columbia (B.C.) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Rev.திருமதி பத்மா சிவானந்தன் கடந்த (24.06.2021) வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற ராஜகாரியர் – அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மகளும்,

சிவா சிவானந்தன், B.Sc., (Financial Advisor Sun Life, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புனிதா, B.A- குமார் (கனடா), Dr. நகுலேந்திரன் – சில்வியா (சிங்கப்பூர்), சச்சி (ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்) – சியாமளா (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரகாஷ் (B.C. Assessment Authority – கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

பன்மொழி (Dir., Island Health B.C.– கனடா) அவர்களின் அன்பு மாமியும்,

கிற்றனா (கனடா), செலீனா (கனடா), ரியானா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி – சுப்பிரமணியம் (இலங்கை), காலஞ்சென்ற சிவதாசன் (Electrical Engineer, Ceylon Electricity Board இலங்கை) – சந்திரா (கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன், மற்றும் Dr.மனோன்மணி – காலஞ்சென்ற சிவதொண்டன் (இலங்கை), Dr.லோகேஸ்வரி – குமாரசாமி (நியூசிலாந்து), விமலாதேவி – காலஞ்சென்ற ஜெயதேவன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

பத்மா தலைமை கணக்காளராகJafferjee Brothers (இலங்கை) யிலும் நிதிக் கட்டுப்பாட்டாளராகRadicals Ltd. (Toronto, கனடா) விலும் கடமையாற்றினார். அர்ப்பணிபுள்ள பத்மா,Master’s College and Seminary (கனடா) இல் honours உடன் பட்டம் பெற்றார்.

அவரின் வாழ்நாளில் எல்லா வயதினரையும் கருணையுடன் வழிநடத்தி, ஆலோசனை கொடுத்து, ஆறுதல் படுத்தினார்.கனடாவில் விக்ரோறியா, B.C க்குச் செல்வதற்கு முன்பு அவர் பல ஆண்டுகளாக Malvern கிறீஸ்தவ தமிழ் சபையின் போதகராக இருந்தார்.

நிதிக் கட்டுப்பாட்டாளராக Watoto Canada விலும், தலைமை கணக்காளராக B.C.புற்றுநோய் நிறுவனம் (Victoria, கனடா) விலும் கடமையாற்றினார்.

ஒரு திறமையான சொற்பொழிவாளரான அவர் அநேகருக்கு வேதத்தை கற்றுகொடுத்து கர்த்தருக்குள் வழி நடத்தினார், மற்றும் தமிழ் இணைய நற்செய்தி வானொலி நிலையமானWaves of Power மூலமும் மேன்பட்ட பிரசங்கங்களை வழங்கினார்.

Rev.பத்மா தமது அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் ஆண்டவருக்கு அவர் செய்த உண்மையுள்ள சேவை மற்றும் நற்செய்தி மீதான ஆர்வம், அவரது அன்பான ஆளுமை, அக்கறையுள்ள இருதயம் மற்றும் பிரகாசமான புன்னகை ஆகியவற்றால் அவர் பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர்களால் அன்பாக நினைவு கூரப்படுவார். அவருடைய வாழ்க்கைக்காக நாம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை கனடா Victoria, British Columbia (B.C.) இல் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக் தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்,
என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு ‘அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்’ ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்.

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளு வேன்’ என்று ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து கூறியுள்ளார்.

(யோவான் 14:1-3) நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரி!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிவா சிவானந்தன் (கணவர்) – 0014169104567

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply