மந்துவில் – கனடா
யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சின்னத்துரை அவர்கள் நேற்று முன்தினம் (30.06.2021) புதன்கிழமை Torontoவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை – வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மகனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சிற்றம்பலம் – தெய்வானை தம்பதியரின் மருமகனும்,
அன்னலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவைச் சேர்ந்த அனுசா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவராசா மற்றும் கனகம்மா, செல்லம்மா, சரஸ்வதி, இராஜேஸ்வரி, கலாவதி, பேபி, இந்திராணி, தியாகராசா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வானந்தம் செல்லையா அவர்களின் அன்பு மாமனாரும், சின்னாச்சிப்பிள்ளை (இலங்கை), சிவகாமிபிள்ளை (ஜேர்மனி), நடராசா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிசோவன், சுவிமிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 05.07.2021 திங்கட்கிழமை காலை 6.00 மணிமுதல் 9.30 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 05.07.2021 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிமுதல் 11.00 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் கிரியைகள் இடம்பெற்று, 05.07.2021 திங்கட்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada என்ற இடத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
செல்வன் (மருமகன்) – 0014165581548