வேலணை – ஜேர்மனி
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சரவணையை புகுந்த இடமாகவும், ஜேர்மனி Hoerstel ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி நித்தியானந்தன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஜயரத்தினம், மகேஷ்வரி தம்பதிகளின் மருமகளும்,
நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், மயூரி, பாகிரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோபி விவேகானந்தா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
விவேகானந்தா தெய்வநாயகி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், மலர்மகள்(கிளி), நித்தியானந்தன்(சோமு), கலைமகள்(கனகம்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(நாதன்), பேரின்பதாசன்(ராசன்), தியாகஈஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருமகள், தம்பிராசா, சிவலோகநாதன், கானசரஸ்வதி, காலஞ்சென்ற கௌரி, ரூபவதனா, சந்திரரஜனி ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
சசிதரன், கோபிதா, கமலக்கண்ணன், தருசினி, சிறிகரன், வருசினி, அரிகரன் ஆகியோரின் அன்பு அன்ராவும்,
கயந்தன், தீபன், வத்சலா, சுபாசினி, நிரூசன், நிசாந்தினி, நிதர்சன், கார்த்திகா, கயூரன், கஸ்தூரன், ஜனா, யூச்சின், சரோன், அஷ்விந்தன், யசீகா ஆகியோரின் அன்பு அத்தையும்,
கலாநிதி சிறீரங்கன், காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், ஜெயாநந்தன் மற்றும் கருணாநந்தன், விஜயேந்திரி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சுகந்தினி, காலஞ்சென்ற மகாதேவன், விக்னேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
அபிசன், அபிராசி, அபிலக்சன் ஆகியோரின் நேசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சகோதரன்
பேரின்பதாசன்(ராசன்)
00447450282704