திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ்

மலர்வு

11.03.1950

உதிர்வு

22.07.2021

நாரந்தனை – மன்னார்

(இளைப்பாறிய நாரந்தனை கிராமசபை ஊழியர்)

ஊர்காவற்துறை நாரந்தனையை பிறப்பிடமாகவும் மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரிமுத்து யேம்ஸ்தாஸ் அவர்கள் 22.07.2021 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து – சவிராசி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – சூசையானா (செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்

கிறிஸ்பியன் லில்லியின் அன்புக் கணவரும்

சுதர்சன், சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்

டிலீசியஸ் நிஷாந்தன் (பிரான்ஸ்), டயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்றவர்களான மரியதாசம்மா பீற்றர் திசநாயகம், யேசுதாசன்,

சேவியதாஸ்,சூசைதாசன் மற்றும் திருமதி அன்ரனிதாசம்மா பெனடிக்ற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்

திருமதி ஜெனோபாறூபி தனபாலசிங்கம்,திருமதி மெற்றலின் நித்தியானந்தராசா,சில்வெஸ்ரர் ரெத்தினசிங்கம், அந்தோனி அமரசிங்கம், திருமதி மேரி கமலாதேவி டேமியன் பாலசிங்கம், திருமதி பற்றிமா மரியதாஸ் சபாரெத்தினம், கிறகோரி பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23.07.2021 வெள்ளியன்று பிற்பகல் 3.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அடம்பன் புனித பிலிப்பு நேரியார் தேவாலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அடம்பன் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு

சுதர்சன் : 0779363253 , 076 309 7303 இலங்கை
சோபிகா : 0033625052560 – பிரான்ஸ்

https://vimeo.com/578323299

Share This Post

Select your currency
EUR Euro