சட்டநாதர் வீதி – யாழ்ப்பாணம்
யாழ். சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் நேற்று (22.07.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,
கேதீஸ்வரன், மனோரஞ்சினி, சுந்தரமூர்த்தி, யோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொற்செல்வி, தர்மகுலசிங்கம், கலாநிதி வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனா, மேனன், டிலன், தனிஷன், தனிஷா, தாரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (23.07.2021) வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் பி.ப 04.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
இல. 89, சட்டநாதர் வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
யோகேந்திரன் (மகன்) – 00447545218518