திருமதி. சுகிர்தவதி வீராசாமி

மலர்வு

15.07.1941

உதிர்வு

24.07.2021

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா

(ஓய்வு பெற்ற ஆசிரியை – யாழ். வேம்படி மகளிர் கல்லூரி)

யாழ்.தொண்டைமானாறை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுகிர்தவதி வீராசாமி அவர்கள் 24.07.2021 அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி துரைராஜா – இரத்தினாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி கிருஷ்ணசாமி- வள்ளித்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கி. வீராசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆனந்தி (Brisbane), விஜித்தன் (Melbourne) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைரெத்தினவதி, லலிதவதி, மானவதி, ரூபாவதி, சண்முகபாலன், சண்முகவரதன், கிருபாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரகுபதி, உஷாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரவீந்திரன், காலஞ்சென்ற குணசிங்கம், தங்கவடிவேல், சிவலிங்கம், ஈஸ்வரி, சுசீலாதேவி, மகேந்திரன் மற்றும் நாகேஸ்வரி, கே.சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாதவ், வேனுஷா, வேனுஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 28.07.2021 அன்று புதன்கிழமை Melbourne, Falkner மயானத்தில் பி.ப 01.45 மணிக்கு நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஆனந்தி ரகுபதி (மகள்) – 0061 433200971
விஜித்தன் (மகன்) – 0061423757016

நடுத்தெரு,
தொண்டைமானாறு
யாழ்ப்பாணம்.

No.52, Manley Street, Epping, Victoria – 3079, Australia.

https://vimeo.com/578800109

Share This Post

Select your currency
EUR Euro