திருமதி நடராசா இலட்சுமிப்பிள்ளை

மலர்வு

05.05.1937

உதிர்வு

26.07.2021

தெல்லிப்பளை – திருகோணமலை

தெல்லிப்பளை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை கட்டை பறிச்சாளை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 26.07.2021 திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் துரையர் நாகம்மாவின் மூத்த புதல்வியும்,

அமரர் து.திருநாவுக்கரசு, து.மாணிக்கவாசகர், ந.நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமரர் க.நடராசாவின் அன்பு மனைவியும்,

இவர் அமரர் புஸ்பராஜா (தபால் அதிபர் அளவெட்டி), குணரத்தினம் (நீர்கொழும்பு), கிருபானந்தம் (ஆசிரியர் யூனியன் கல்லூரி தெல்லிப்பளை), உமாசங்கர் (ஆசிரியர் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி, சிவநேசன் (வசந்தன் – அவுஸ்திரேலியா – 0061421100668), உருத்திரன் (இத்தாலி), செ.புஸ்பமலர், பத்மராணி, கீததாணி, அமரர் நகுலேஸ்வரி, சாந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

தேவமலர், வசந்தமாலா, துசித்தா, ஜெயவதனி, மேரிவினோதினி, அபிராமி (கமநல அபிவிருத்தி திணைக்களம் திருகோணமலை), செல்வரத்தினம், விஜயகுமார், செல்வரட்ணம், சிறிக்குமார், இரவீந்திரதாசன் ஆகியோரின் மாமியாரும்,

அன்னார் பேரப்பிள்ளைகளின் பேர்த்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26.07.2021 திங்கட்கிழமை இன்று மாலை 4.00 மணியளவில் தெல்லிப்பளை விறங்கொடையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தெல்லிப்பளை கிழக்கு கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்.

https://vimeo.com/579328667

Share This Post

Select your currency
EUR Euro