இடைக்குறிச்சி கிழக்கு – வரணி
இடைக்குறிச்சி கிழக்கு, வரணியைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவயோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தவயோகமலர் (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன், சாருசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேந்திரன், ஜஸ்வரியாவின் மாமனாரும்,
சுருதியின் பாசமிகு பேரனும்,
ஆனந்தமகேஸ்வரி, இரத்தினசோதி, விசியகுமார்,மோகனராஸ், யோகநாதன், குமுதினி, குமுதன், முகுந்தன் ஆகியோரின் சகோதரரும், ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (27.07.2021) அவரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கொடிக்காட்டு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.