திருமதி நேசரெத்தினம் தம்பிராசா

மலர்வு

25.07.1933

உதிர்வு

03.08.2021

எருவில் கிழக்கு – பாரதிபுரம்

எருவில் கிழக்கு பாரதிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. நேசரெத்தினம் தம்பிராசா அவர்கள் 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, சங்குவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலிப்போடி செம்பகணாச்சி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், சீதாலெட்சுமியின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னத்தம்பி, கனகரெத்தினம், இராசதுரை, இளையதம்பி, தெய்வானை, குணநாயகி மற்றும் குமாரப்போடி, பொன்னம்மா, சௌந்தரி, பூபதி, சீவரெத்தினம், காந்தமலர் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ஏகாம்பரம், மைலிப்போடி, ஆறுமுகம், யோகராஜா மற்றும் செல்வராசா, வையாளிப்போடி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி, நீலவேணி, மகேஸ்வரன் காலஞ்சென்ற தில்லேஸ்வரன், செந்தூர் (London), பத்மினிதேவி, கயிலைநேசன், கதிர்காமவேல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் இராசநாயகி, வேதநாயகி, அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

செல்வநாயகம், கிருபையம்மா, ஐயாத்துரை, புஸ்பவதி, அருணா (London), ஈஸ்வரன், உசாநந்தினி, சுகிதாசினி, மகேந்திரன், உதயகுமார், பேரின்பராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவராணி (ஆசிரியர் – வம்மி வட்டுவான், வாகரை) தவேந்திரன் (தாதிய உத்தியோகத்தர் – களுவாஞ்சிகுடி), தேவரூபன் (விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர்), நிமல்ராஜ், குணராஜ், ஜதுஸ்ராஜ், ரூபகாந்தன், துயந்தன், கிருஸ்ரின் (மாவட்ட நீதிமன்றம் – திருகோணமலை), வினேஸ்காந், சிவகுமார், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

வேதரூபி, துஷாந்தினி, உருத்திராங்கரன், குணாநிதி, தர்சினி, தினேகா, பிரியா, லக்சிகா, ஆஹாஸ் பொருளியலாளர் London), அக்ஷயா (London), அஸ்வினி, டசாந், சிவசுப்பிரமணியம், துசாந்தினி, நிதர்சினி (தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

திவானு, பவிஷாந், ஆதிஷா, ஜஸ்மிகா, வவிசனா, லக்ஷித், லஸ்விந், கரிசினி, அக்ஷாத், திபிக்ஷா, சஸ்விதா, கிந்துஜன், ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தரும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்.

https://vimeo.com/583248828

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro