நெடுந்தீவு – கிளிநொச்சி
நெடுந்தீவு நடுக்குறிச்சியை பிறப்பிடமாகவும் இல.57, உதயநகர் கிழக்கு, கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி) (05.08.2021) நேற்று வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற அப்புக்குட்டி சரவணமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும்,
சுப்பிரமணியம் – மீனாட்சிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
இரவீந்திரனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிசன் மற்றும் டின்சி, தர்சன் (ஆசிரியர் – கிளி/கரியாலை நாகபடுவான், இல.02, அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலட்சுமி (தங்கம்), சந்திரபாலன் (லண்டன்), நல்லையா (மல்லாவி), பேரின்பநாதன் (யா/புங்குடுதீவு சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம்), பாக்கியலட்சுமி (வசந்தி – நெடுந்தீவு) ஆகியோரின் சகோதரியும்,
அருனேந்திரன் (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
டொன்வொஸ்கோ, வசந்தகுமாரி (லண்டன்), மல்லிகாதேவி, சசிகலா (ஆசிரியை), கிருபாவரதன் (ப.நோ.கூ.ச கிளை முகாமையாளர் – நெடுந்தீவு), காலஞ்சென்ற நவமணி, குணரத்தினம், குணமணி, யோகமணி, மனோன்மணி மற்றும் இராஜகுலேந்திரன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (06.08.2021) வெள்ளிக்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 4.00 மணியளவில் திருநகர் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0773712807,
0778590004
முகவரி:
உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.