நெடுந்தீவு – வவுனியா
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு புவனேஸ்வரி கடந்த (16.08.2021) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – பூமணி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
முத்துக்குமாரு (ஓய்வுபெற்ற காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவானந்தி, சிவகுமார், பாலகுமார், டயகுமார், கேமகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார், தாரணி, யசோதா, கிருசாந்தி, கஜறூபி ஆகியோரின் அருமை மாமியாரும்,
வனிதரத்தினம், தியாகவதி, காலஞ்சென்ற தில்லையம்பலம், தம்பிஐயா, கருணாராணி, கருணாம்பிகை, தருமநாயகி, காலஞ்சென்ற நாகேஸ்வரன், டயோசினி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
கனகரெத்தினம், காலஞ்சென்ற நாகலிங்கம், கலாநாயகி, மங்களராணி, தேவரத்தினம், ஐயம்பிள்ளை, தேவராசா, துரைரட்ணம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தில்லையம்பலம், தம்பையா, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், தனன், தசன், யட்சி, அட்சயன், கோநிலவன், தனனியா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கேமகுமார் (மகன்) – 0033668919762