ஊர்காவற்றுறை – நீர்கொழும்பு
(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்)
ஊர்காவற்றுறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர் கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீபன் மனுவேற்பிள்ளை அவர்கள் 28.08.2021 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை – றோசலீன் தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை – மேரிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஹரியற் ஸ்ரீபன் (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சோபனா பிறேமினி (கனடா), அன்ரன் றவிறாஜ் (இத்தாலி), காலஞ்சென்ற அமலறூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிலிப் கருணாகரன், றூபி, சறோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விக்டர், லூயிஸ், மேரிகிளாறா மற்றும் ஜோர்ஜ் (கனடா – இளைப்பாறிய பொலிஸ் திணைக்கள அலுவலகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான றீற்றா லூயிஸ், அல்பிரட் யோசப் மற்றும் மேசிலூட்ஸ் ஆகியேரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பீற்றர், கிறிஸ்தோபர், சிறில் மற்றும் அனி, லில்லிறோஸ், அம்புறோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றுபினா, மரீனா, அலன்பீன், றொபின்ஜீன் ஆகியோரின் சித்தப்பாவும்,
சுரேந்திரன் (நிறாஜ்), நிமலேந்திரன் (நிமால்) ஆகியோரின் மாமனாரும்,
வதனா, நிக்சன், நிறஞ்சன், நிர்மலன் ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரவீன், ஜோய் ஸ்ரிவின், ஹரிஷ், மெரிஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் நீர்கொழும்பில் நடைபெறும்.
தற்போதைய நாட்டு நிலமை காரணமாக இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் அறியத் தரமுடியாமைக்கு வருந்துகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
அன்ரன் றவிராஜ் (மகன்) – 00393249085140