காரைநகர் – நல்லூர்
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிராசா நேற்று (03.09.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – செல்லாச்சி தம்பதியரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரனின் (ஈசன் – அவுஸ்திரேலியா) அன்புத் தாயாரும்,
கலைவாணியின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி (நாகம்மா), சடாச்சரம், காலஞ்சென்ற கனகம்மா, காலஞ்சென்ற பரமநாதன் மற்றும் மாணிக்கம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி, பொன்னம்மா, காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் உலகநாதன் (சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.09.2021) சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் நல்லூர் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்
தொடர்புகளுக்கு:
077 433 9427
முகவரி:
இல. 44/16,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.