திருகோணமலை – கோப்பாய்
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, வன்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் அவர்கள் நேற்று (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று கோப்பாய் லில்லி முதியோர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற குமார் – மீனாட்சி தம்பதியரின் மூத்த புத்திரரும்,
செல்லதுரை – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மசறோஜினி (ஓய்வுபெற்ற M.G.H.S ஆசிரியர் பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நிமல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யுட் மமான்ஸ் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜஷ்றன், ஜெரூபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப. 4:00 மணியளவில் அன்னை வேளாங்கன்னி ஆலயம் வவுனிக்குளம் எனும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
காயத்திரி (மகள்) – 0061478794375