திருமதி. வினிபிரட் விமலேந்திரநாதன் பாலராணி

மலர்வு

24.12.1954

உதிர்வு

08.09.2021

வரணி – கொழும்பு

வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட வினிபிரட் விமலேந்திரநாதன் பாலராணி அவர்கள் 08.09.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பூமணி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான டானியல் ஜேம்ஸ் பொன்னுத்துரை மேரி – அன்னரத்தினம் தம்பதியரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வினிபிரட் விமலேந்திரநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

வில்லியம் ஜெயநேசன் (ஆசிரியர் – கொழும்பு புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு – 04), டானியல் ஜெயசீலன் (லண்டன்), வின்சன் ஜெயக்குமார் (கனடா), ஸ்ரீபன் ஜெயராஜ் (BBK- கணக்காளர்), ஜெசி ஜெயபாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பபிந்தினி, பானுமதி (லண்டன்), ரூபினி (கனடா), டிலானி, றிக்கேஸ் (ஆசிரியர்- கொழும்பு புனித/பரி.தோமையர் கல்லூரி, கல்கிசை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பரஞ்சோதி, பாலகௌரி, வரதலக்ஷ்மி, காலஞ்சென்ற பாலசோதி, சிவயோகம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம், பேரம்பலவாணர், கமலநாதன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் பாலேந்திரன், இந்திராணி மற்றும் வணபிதா நவேந்திரானுகூலன், கஜேந்திரலலிதா, இந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வள்ளிநாயகி, செல்வநாயகி, கலாநிதி வணபிதா எட்வேட் நயினார் லோரன்ஸ், லில்லிரோகினி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பெவன், பெவினி, பெனாஜா, ஜெறிஜா, ரியானா, ரஷான், டிவியா, நிவியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஜெய்டன், ஜெய்ட்றா ஆகியோரின் அம்மம்மாவும்,

சுகந்தினி (லண்டன்), பாலகுமார், உதயமதி (லண்டன்), கதிர், வசீகரன் (லண்டன்), யசோதரன் (லண்டன்), பாலஜோதி (லண்டன்), பிரபாகரன் (கொழும்பு), சிறீகரன் (லண்டன்), நிரோஜா, நிரோஜன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுனிற்ராநாளினி டெய்சி (கனடா), அனுசியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

யூலியனா (கனடா), கிறிஸ்ரியனா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
டானியல் (மகன்) – 00447888888596

இல. 20, 1/4 இனிசியம் வீதி,
தெஹிவளை,
கொழும்பு.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro