திருமதி. தியாகராசா தங்கமலர்

மலர்வு

15.06.1941

உதிர்வு

16.09.2021

யாழ்ப்பாணம் – உருத்திரபுரம்

யாழ்ப்பாணம் கட்டபிராயை பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி. தியாகராசா தங்கமலர் அவர்கள் 16.09.2021 வியாழக்கிழமை கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா நாகம்மா அவர்களின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற தியாகராசாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தியாரூபன் மற்றும் தியாகசொரூபன், தியாகமலர், தியாகவேணி, தியாகவதனி ஆகியோரின் அன்புத்தாயாரும்,

மனோகரலிங்கம், காலஞ்சென்ற செழியன், மதிஅழகன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன், தங்கராசா, செல்வநாயகம், இராசமலர், மற்றும் கனகலிங்கம், மனோகரன், தவமணி, சுரேஷ்பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 1 மணிமுதல் நண்பகல் 2.30 மணிவரை, Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ஒன்ராறிவோவில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சுரேஷ்பிறேமச்சந்திரன் – 0777362481
சர்வேஸ்வரன் – 0777184410
சொரூபன் – 0014164007797

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro