கொடிகாமம் – கனடா
யாழ். பருத்தித்துறை வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பைக்குறிச்சி வரணியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேஸ்வரன் அவர்கள் கடந்த (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை – சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு இளைய மகனும்,
இரத்தினம் – கண்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
மதிவதனி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி (கனடா), சதீசன் (பிரான்ஸ்), ஜனார்த்தனி (ஐக்கிய அமெரிக்கா), பஜீதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீப் (கனடா), உஷாநந்தினி (பிரான்ஸ்), விஜீபன் (ஐக்கிய அமெரிக்கா), பானுபிரியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகராசா (இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி, பத்மாதேவி (இலங்கை), யோகானந்தம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி (இலங்கை), இராஜரெட்ணம் (இலங்கை), திரவியநாயகம் (இலங்கை), ரஞ்சினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜேஸ்வரி (இலங்கை), இராசவினாயகம் (இலங்கை), இராஜமனோகரி (இலங்கை), கனககேஸ்வரி (லண்டன்), மதிவாணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அவீனா, அபினாவ், ஜஸ்மிலா, ஜமிலா, சந்தோஷ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சதீசன் (மகன்) – 0033624492253