திருமதி. சின்னத்தங்கச்சி சந்திரலிங்கம்

மலர்வு

01.07.1950

உதிர்வு

21.09.2021

மயிலிட்டி – சுன்னாகம்

மயிலிட்டி யார்மையைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி உடுவில் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கச்சி சந்திரலிங்கம் நேற்று (21.09.2021) செவ்வாய்க்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கந்தசாமி சந்திரலிங்கத்தின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை – நாச்சன்பிள்ளையின் அன்பு மகளும்,

அ.கிருஷ்ணவேணி (சட்டத்தரணி), ச.பராபரன் (பொறியியலாளர்), ஜெ.நீலவேணி (தொழில்நுட்ப அலுவலர் நகரசபை, வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ச.அருள்நாதன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்) ப.யசோதினி, கு.ஜெயகோபன் (பதவி நிலைத் தொழிநுட்ப அலுவலர் – வவுனியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெ.ஜனூதன், ஜெ.சிவனுஜன், ஜெ.அபிஷாலினி, அ.பவிஷாஜினி, அ.நிவிஷன், அ.டக்ஷாவினி, ப.அக்ஷிதா, ப.சக்தி அபிராம் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.09.2021) புதன்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
077 077 3694
077 016 7064

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro