பருத்தித்துறை – பலாலி வடக்கு
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் பலாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தற்போது மானிப்பாய் சென்ற் அன்ஸ் ஒழுங்கையில் வசித்து வந்தவருமாகிய திருமதி அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் பிலோமினம்மா அவர்கள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சாமிநாதர் மாகிறந் ஆகியோரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியசீலன் (டென்மார்க்), அற்புதஜெயசீலி (ராசாத்தி – அமரர்), ஜெயசீலன் (நவம் – லண்டன்), மாகிறற் மரியசீலி (செல்லம்மா – நோர்வே) ஆகியோரின் அன்பு தாயாரும்,
கெலன்மேரி (சாந்தி – டென்மார்க்), வசந்தராணி (சறோ – லண்டன்), சைமன் சந்தியாப்பிள்ளை (நோர்வே) ஆகியோரின் மாமியாரும்,
றெஜினோல் (றெஜி – அமரர்), அஸ்வின் யூலியா, ஜெசிக்கா, ஜெனிபர், சைத்தா மெல்வின், அலெக்ஸ், சஜீவன், சைந்தன் ஆகியோரின் பேத்தியும்,
மெல்ஸ்ரன், மைக்கல், ஆகியோரின் பூட்டியுமாவர்.
அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனையின் பின்னர் காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
077 032 2868