திருமதி. அருளையா தவமலர்

மலர்வு

01.12.1938

உதிர்வு

29.09.2021

மல்லாகம் – யாழ்ப்பாணம்

(இளைப்பாறிய ஆசிரியை – யாழ் கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை)

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருளையா தவமலர் அவர்கள் 29.09.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா சேதுபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அருளையா (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில்வாசன் (நோர்வே), மைதிலி (யாழ்/பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் சிவபாதம், காலஞ்சென்ற கனகரத்தினம் செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனமாலா செந்தில்வாசன், றோஸ் சிவபாதம் (பிரான்ஸ்), ஜோர்ச் சிவபாதம் (பிரித்தானியா), அன்ரன் றோய் சிவபாதம் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பவன், நிருத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30.09.2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முருகநாமம் மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வலி வடக்கு கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
செந்தில்வாசன் (மகன்) – 004791395529
மைதிலி (மகள்) – 0212227213

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro