குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியார்

மலர்வு

15.01.1929

உதிர்வு

09.10.2021

யாழ்ப்பாணம் – நல்லூர்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி பெருமதிப்புக்குரிய குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்கள் தனது 92 ஆவது அகவையில் 09.10.2021 சனிக்கிழமை இன்று சிவபதமடைந்தார்.

அன்னார் 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகியாக சேவையாற்றி வந்தவராவார்.

ஏற்கனவே ஆலய வழிநடத்தல் திறனில் இவரது தந்தை இரகுநாத மாப்பாண முதலியார் இவரது சகோதரான சண்முணதாஸ மாப்பாண முதலியாருடன் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தமையாலும் இயல்பாகவே முருகப்பெருமான் மீது தீராத பக்திப்பெருக்கை கொண்டிருந்தமையாலும் இவரது பணிக்காலம் ஆலய வளர்ச்சியில் மிகப்பெரும் தனித்துவமிக்கதாய் நகர்ந்து வந்தது.

அது மட்டுமல்லாது எப்போதும் ஆலயத்திலேயே இருந்து கடந்த 50 வருடங்களாக முருகப் பெருமானுக்கு சேவையாற்றி வந்தவராவர்.

மிக எளிமையாய் எவ்வித ஆடம்பரங்களும் அற்ற இவரது நிர்வாகத்திறனும் கோயிலுக்கான ஒரு சதத்தையேனும் இறதிருப்பணிக்கு அர்ப்பணிக்கும் நேர்த்தியிலும் தூய்மைபக்தியினாலும் இவரது பணிச்சிறப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டதொன்றாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro