புங்குடுதீவு – கிளிநொச்சி
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்கள் நேற்று (12.10.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – நாகம்மா தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – செங்கமலம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை (வள்ளி) அவர்களின் அன்புக் கணவரும்,
கமலதர்சன் (பிரான்ஸ்), லிகிதரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான விஜிதரன், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேலாயுதபிள்ளை (நோர்வே), பிள்ளை (சுவிஸ்), வன்னியசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரமிளா (பிரான்ஸ்), ஜெனிகா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
தேந்துளசி, கலைமதி, கோபிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கமலதர்சன் (மகன்) – 0033699351551


