திருமதி. மார்க்கண்டு பரமேஸ்வரி

மலர்வு

12.07.1946

உதிர்வு

17.09.2021

மண்டைதீவு – யாழ்ப்பாணம்

கடந்த 17.09.2021 வெள்ளிக்கிழமை எமது தாய் காலமானார்.

அன்னார் கணபதி – பிள்ளைமுத்துவின் பாசமிகு மகளும்,

கணபதி – மார்க்கண்டுவின் அன்பு மனைவியும்,

விஜயகோபால் (சுவிஸ்), சுரேஸ்குமார் (ஜேர்மனி), ஜெயகுமாரி (யாழ்ப்பாணம்), ரகுலகுமார் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தனிஸ்குமார், ரகுலகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்மினி, மயூரா, நவீந்திரராசா, சர்மினி (சைய்தா) ஆகியோரின் மாமியாரும்,

ஹம்ஷிகா, சன்றிலான், சுவேக்கா, சுவேந்த், மனாசே, அபிசாந்த் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

குணேஸ்வரியின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கமலநாதனின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பிரிவுச் செய்திகேட்டு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தமது அனுதாபங்களை தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளுக்கும் அனைத்து வழிகளிலும் ஓடிவந்து உதவி புரிந்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று கீரிமலையில் (15.10.2021) வெள்ளிக்கிழமை இடம்பெறும் அந்தியேட்டி நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து (17.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை

பத்துமாதம் அன்னை சுமந்து

அம்புலிகாட்டி, அமுதினை ஊட்டி,

அன்பை பொழிற்து ஆசையில் வளர்த்த என் தாயார்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
077 199 3933

முகவரி :
இல.150, கண்டி வீதி,
யாழ்ப்பாணம்.

Share This Post

Select your currency
EUR Euro