நயினாதீவு – சுவிஸ்
நயினாதீவு, பருத்துறை அல்வாய் வடக்கு, (Swiss) வசிப்பிடமாக கொண்ட திருமதி சின்னம்மா பரராசசிங்கம் அவர்கள் கடந்த 10.09.2021 அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சபாபதிப்பிள்ளை (திருகோணமலை), காலஞ்சென்றவர்களான வேலாயுதம், குமரையா, பொன்னம்மா, பராசக்தி, விசாலாட்சி, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரமூர்த்தி, சிறிபக்தலிங்கம், சிறிராம், சிவசிறி (Winterthur – சிவா அல்லது சிறி, அல்வாய் வடக்கு நண்பர்களுக்கு பிள்ளையார்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேந்தினி, காந்திமலர், ஜெயானந்ததேவி, யூலியானா, காலஞ்சென்ற திசைவீரசிங்கம் (புங்குடுதீவு 10 ம் வட்டாரம் – வீராமலை), மணோன்மணி (சுவிஸ் பேர்ன்), சிவம் (சுவிஸ் ஓல்டன்), நாகேஸ்வரி (திருநெல்வேலி), காலஞ்சென்ற மங்களகௌரி (திருநெல்வேலி), ரவீந்திரன் (நயினாதீவு), உதயமலர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சீதாசரஷ்வதி (கொழும்பு), இளங்கோவன் (சுவிஸ் பேர்ன்), சிற்றம்பலம் (அச்சுவேலி), விவேகானந்தன் (யாழ்ப்பாணம்), காசிநாதன் (மணிவண்ணன் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் சின்னம்மாவும்,
காலஞ்சென்ற கருணாநிதி, கந்தவேல் (நல்லூர்), ஈஸ்வரன் (கனடா), திருமகள் (கனடா), ராஜலஷ்மி (மணி – கனடா), ஆகியோரின் பாசமிகு குஞ்சியாத்தாவும்,
சஹானா, சனோர், சிகானியா, சிசாயினி, ராகவி, ரவீனா, ரதீஸ், ஸ்கார்லெட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 24.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) Quartier Verein Gutschick- Mattenbach Scheidegg Str.19 8400 Winterthur என்ற இடத்தில் அந்தியேட்டி கிரியைகள் நடைபெறும்.
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள், இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சிறி – 00041789554724
ராம் – 0041764031971
சிவசிறி – 0041762135336