சண்டிலிப்பாய் மேற்கு – யாழ்ப்பாணம்
யாழ். சண்டிலிப்பாய் மேற்கு, சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவம் சுப்பிரமணியம் அவர்கள் கடந்த (19.10.2021) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் தம்பிராஜா சுப்பிரமணியத்தின் (இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திரு.திருமதி ஐயாத்துரை – தங்கம்மாவின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற திருமதி அஞ்ஜலா ஜெயகரன் மற்றும் அஞ்ஜிதன், திருமதி அனுசியா, திருமதி அஜந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (21.10.2021) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் சண்டிலிப்பாய் மேற்கு இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
குடும்பத்தினர்.
முகவரி :
சண்டிலிப்பாய் மேற்கு,
சண்டிலிப்பாய்.
தொடர்புகளுக்கு:
077 741 2348