திருமதி. பத்மநாதன் தவமணிதேவி (சின்னமணி)

மலர்வு

06.03.1943

உதிர்வு

18.10.2021

நல்லூர் – இந்தியா

நல்லூர் வடக்கு, விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை 117 ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் தவமணிதேவி அவர்கள் 18.10.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – செல்லம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பு – பவளம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

பத்மநாதன் (சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவநாதன் (ரகு- சுவிஸ்), தயாகரன் (வவி), தத்ரூபன் (ரூபன்- ஜேர்மனி), தத்ரூபினி (ரூபி- ஜேர்மனி), சத்தியபாலினி (சக்தி- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகரத்தினம், தங்கமலர், அன்னலிங்கம், துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சோமலிங்கம்- பவளம் தம்பதியரின் மைத்துனியும்,

கௌரி(சுவிஸ்), செபஸ்ரியானோ (ஜேர்மனி), ரூபினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தயாரஞ்சன் (மிகைல்), சஞ்சய், மதியழகி, தமிழிசை ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சோபி(பபி) அவர்களின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (26.10.2021) செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09: 45 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை நடைபெற்று பின்னர் ந.ப 12:05 மணியளவில் புழுதிவாக்கம், சென்னை மின் தகன மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

வீட்டு முகவரி:
இல. 03,
வேல்முருகன் காலணி,
சென்னை -117,
தமிழ்நாடு,
இந்தியா.

தொடர்புகளுக்கு:
ரூபன் (மகன்) – 004917623315807

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro