மானிப்பாய் – கொழும்பு
மானிப்பாய் பேரம்பலம் அவெனியூ சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சோமசேகரன் அவர்கள் 28.10.2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (ஆசிரியர்) – நாகரத்தினம் தம்பதியரின் புதல்வியும்,
வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைரமுத்து (செல்லையா வாத்தியார் – தலைமை ஆசிரியர்) மனோன்மணி அம்மா தம்பதியரின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து சோமசேகரன் (ஓய்வுநிலை பிரதம எழுது வினைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வைதேகி (நோர்வே), மைக்ரோ பீசி சிஸ்டம் இயக்குனர்களான ககனாந்தா, குகனானந்தா ஆகியோரின் தாயாரும்,
பிரபாகரன் (நோர்வே), வினோதா, கார்த்திகா ஆகியோரின் மாமியாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான யுகவதி, மகேஸ்வரி மற்றும் பரஞ்சோதிநாதன், மங்கையற்கரசி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் பொன்மயிலாம்பிகை, காலஞ்சென்ற பூரணானந்தம்பிள்ளை மற்றும் திருநிலைநாயகி (கனடா), செல்வேந்திரன் (கனடா), விஜயேந்திரன் (லண்டன்), காலஞ்சென்ற பாலேந்திரன் மற்றும் கலாமணி, காலஞ்சென்றவர்களான சண்முகரட்ணம், பாலேந்திரன் மற்றும் அமிர்தலிங்கம், உமாதேவி, விஜயசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
பஜனேஸ்வரி (பிரான்ஸ்), மகாலிங்கம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் காந்தமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் மதிவதனி (லண்டன்), பிரியதர்ஷினி (பிரான்ஸ்), லோகநாதன் (KMT) ஆகியோரின் சகலியும்,
கருணிகா (நோர்வே), தனிஷ்கா, யாதுரா, பிரதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
செல்வேந்திரன் (மைத்துனர்) – 0016479848446
வீட்டு முகவரி:
இல.115/8,
டபிள்யூ ஏ சில்வா
மாவத்தை,
வெள்ளவத்தை,
கொழும்பு.