அனலைதீவு – வவுனியா
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் – 6ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இருமரபும் தூய கனகராய முதலிய வம்சம் திருமதி. பூமாவதி (பூமா) தனிநாயகம் கடந்த 18.11.2021 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமநாதர் குமாரசாமி – பார்வதி குமாரசாமி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
தனிநாயகம் – நெடுந்தீவு (இளைப்பாறிய உதவி ஆணையாளர், கமநல சேவைகள் திணைக்களம் ) அவர்களின் அன்பு மனைவியாரும்,
அமரர்கள் தில்லைநாயகம், திருமதி சொர்ணலட்சுமி சேதுகாவலர் மற்றும் சிவஞானம் (பிரான்ஸ்), திரு.சோதிநாதன் (கனடா), கமலாவதி (இலங்கை ) தவநாயகி (இலங்கை ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருமதி குணநிதி தில்லைநாயகம் (கனடா), அமரர் திரு.சேதுகாவலர், திருமதி. கமலம் சிவஞானம் (பிரான்ஸ்), திருமதி சொர்ணம் சோதிநாதன் (கனடா), அமரர்கள் சண்முகநாதன், திருமதி. சரஸ்வதி மாணிக்கவாசகர், திருமதி கண்மணி தியாகராஜா, அமரர்கள் திருமதி பூபதி வெற்றிவேல், சுப்பிரமணியம் குமாரசாமி மற்றும் திருமதி லோகநாயகி மனோகரன் ஆகியோரின் மைத்துனியும்,
மதிவதனி தமிழ்மாறன் (இங்கிலாந்து), சசிவதனி விசாகரட்ணம் (இங்கிலாந்து). அகிலவதனி தர்சன் (நியூசிலாந்து), லோகன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமிழ்மாறன் (இங்கிலாந்து), விசாகரட்ணம் (இங்கிலாந்து), தர்சன் (நியூசிலாந்து) பாசமிகு மாமியாரும்,
அஷ்வினி, கவின், அமித்தா. விஷ்ணு, நவின், அனிக்கா ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் இன்று ( 21.11.2021 ) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு வேப்பங்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் ( இல 43, 6ம் ஒழுங்கை , மன்னார் வீதி ) நடைபெற்று, பூதவுடல் தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொலைபேசி : 0242220515
அலைபேசி – 0761973124
00447459957000