திருமதி. செல்லத்துரை மகேஸ்வரி

மலர்வு

08.08.1937

உதிர்வு

24.11.2021

கோணாவளை – கரவெட்டி

கோணாவளை, கரணவாய் தெற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை மகேஸ்வரி நேற்று (24.11.2021) புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் செல்வமகாலட்சுமி (ஓய்வுபெற்ற பொறுப்பதிகாரி – கரவெட்டி தெற்கு, மேற்கு உப அலுவலகம், உடுப்பிட்டி), காலஞ்சென்ற ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புத்தாயும்,

சிவம், மதனமோகன் ஆகியோரின் மாமியும்,

Dr.துளசி, Dr.காயத்திரி, Dr.ஜனனி, ஜனகன், கஸ்தூரி ஆகியோரின் பேர்த்தியும்,

இராசலட்சுமி, துரைராசா, லீலாவதி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தங்கமுத்து, கமலாதேவி, இராஜரட்ணம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.11.2021) வியாழக்கிழமை 9.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பூவரசம்திட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
சி.சிவம் (மருமகன் – சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை)

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro